புலம்பெயர் அமைப்புக்களிடம் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கலுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி முழு ஆதரவினை வழங்க வேண்டும் என பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் இன்று(23.04.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
புலம்பெயர் அமைப்புக்கள்
‘‘பிரித்தானிய இந்துக் கோவில்கள் சங்கங்கள் ஆகிய நாம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்து கொள்வதுடன் மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி இவ் நிர்வாக முடக்கலிற்கு உங்கள் ழுமு ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.
இவ் நிர்வாக முடக்கலை முன்னின்று நடத்தும் அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகப்பூர்வமான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கின்றோம்.
நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் நிர்வாக முடக்கலில் பங்கு கொண்டு இதனை முன்னெடுத்து இதன் வெற்றியை சிங்கள பௌத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்‘‘ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
