வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜீவன் தியாகராஜா வெளியிட்டுள்ள தகவல்
வட மாகாணத்தில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஒத்துழைப்புடன் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்ற வட மாகாண ஆளுநர் அங்குள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடி நிலையில் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கின் சுகாதாரத் துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் உதவுவதற்கு தயாராக இருக்கின்றது.
புலமைப் பரிசில்கள்
இதேவேளை, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு புலமைப் பரிசில்களை பெற்றுக்கொடுப்பதற்கும் வடக்கு மாகாணத்துடன் இணைந்து சிங்கப்பூர் பல்கலைக்கழகம் செயற்படவுள்ளது.

மேலும் மலேசியா சுற்றுலா துறை அனுபவங்களை வடக்கின் சுற்றுலாத்துறை
மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வதும் முதலீட்டாளர்களை அழைப்பது
தொடர்பிலும் முதற்கட்ட சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்துந்துள்ளது.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri