பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்! மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை

Jaffna Tamil
By Rakesh Oct 13, 2023 01:14 PM GMT
Report

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பொது முடக்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை உடனடியாக மீளப் பெறுமாறு இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கோரியுள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் இன்று (13.20.2023) அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குபேரர்களுக்குக் குடிசை மக்களின் துன்பம் தெரியாது. பொது முடக்கத்துக்கு அழைத்த அரசியல்வாதிகளுள் பலர் குபேரர்கள். வசதிகளின் மடியில் வாழ்பவர்கள். சொகுசுகளின் சொப்பனத்தில் மகிழ்பவர்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பில் திளைப்பவர்கள் பலர். மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சுவோர் சிலர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

இழப்பைத் தாங்கும் வலிமை

இன்று உழைத்தால் நாளைய கஞ்சி. இன்றைய சம்பளம் நாளைய தீபாவளிக்கு. ஈழத் தமிழர் தாயகத்தின் உழைக்கும் தொழிலாளர் 3 இலட்சம் தமிழரின் நிலை. 10 ஆயிரம் ரூபா தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரை நாளாந்தம் பணம் புரள உழைப்போர் சிறு வணிகர்கள். அப் புரளலில் தேறும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாவுக்காக நாள் முழுதும் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கின்றார்கள்.

பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்! மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை | North And East Hartal Maravanpulau Sachithanandan

இத்தகைய சிறு வணிகர்களின் தொகை 3 இலட்சம் ஈழத் தமிழர் தாயகத்தில். பொது முடக்கத்தால் மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் நாளாந்தம் உழைக்காமல் மாதம் தோறும் வங்கியில் சம்பளத்தைக் குறைவின்றிப் பெறுகின்ற அரச ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள். அவர்களுள்ளும் கடமை உணர்வாளர் முடங்க விரும்பார்.

ஈழத் தமிழர் தாயகத்தில் அவர்களின் தொகை 3 இலட்சமே. ஈழத் தமிழர் தாயகத்தில் பெருவணிகர் தொகை 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வரை. பொது முடக்கத்தால் இவர்களுக்கு இழப்புக் கணிசமாகும். எனினும், அந்த இழப்பைத் தாங்கும் வலிமை அவர்களுக்குப் பெருமளவு உண்டு.

பயண முன்பதிவுடன் காத்திருக்கும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர் யாவரையும் பொது முடக்கம் கடுமையான உளைச்சலுக்கு உள்ளாக்கும்.

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!

இயல்பு வாழ்க்கை

பொது முடக்கத்துக்கு அழைத்த குபேரர்களான அரசியல்வாதிகளே, போராட்டங்களால் தொடர்ச்சியாகப் பொருள் இழந்து, ஊக்கம் இழந்து, மெது மெதுவாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தாயகத்தின் ஏழைகளான 8 இலட்சம் குடும்பத் தலைவர்கள் மீது, சார்ந்த பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றாதீர்கள்.

மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைத்தீர்கள். மக்கள் வரவில்லை என்ற குறை உங்களுக்கு. உங்கள் போராட்டம் ஈழத் தமிழர் தாயகம் முழுவதுமாக அமையவில்லை. மருதனாமடத்தில் போராடினால் முசலியில் உணர்வு ஏறுமா? கொக்குவிலில் போராடினால் கல்முனையில் உணர்வு பீறிடுமா?

பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்! மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை | North And East Hartal Maravanpulau Sachithanandan

குளப்பிட்டிச் சந்தியில் மண்டியிட்டால் கொக்கட்டிச்சோலையில் உணர்வு குமுறுமா? 25 ஆயிரம் சதுர கிலோமீற்றர் நீண்டு அகன்ற தமிழர் தாயகத்தை 5, 6 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்க முயலாதீர்கள். பிரதேச வாதத்தைத் தூண்டாதீர்கள். யாழ்ப்பாணிகள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் என ஏனைய பிரதேசத்தவர் கூறும் நிலைக்குத் தள்ளாதீர்கள். போராட்டத்துக்கு உரிய காரணங்கள் உள்ளன. மனித நாகரிக வரலாறே போராட்டத்தின் பெறுபேறு. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

இன்றைய மறுவாழ்வுச் சூழ்நிலையில், தோல்வியால் முடங்கிய விடுதலை உணர்வுகளையும் தோல்வியால் இழந்த தற்சார்புப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் நிலையில், பொது முடக்கம் போராட்டமாகாது. இயல்பு வாழ்க்கையைக் குழப்புவது போராட்டமாகாது. பொருளாதாரத்தை வீழ்த்துவது போராட்டமாகாது. பொது முடக்கத்தைக் கோராமல் போராட்ட உத்திகளை மாற்றுங்கள். இயல்பு வாழ்க்கையைக் குழப்பாமல், மீள் வளர்ச்சியை வீழ்த்தாமல் போராட்ட உத்திகளைத் தீர்மானியுங்கள்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்...! வெளியான தகவல்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்...! வெளியான தகவல்

ஈழத் தமிழர் தாயகம்

ஈழத் தமிழர் தாயகத்தின் மரபுகளை மீட்டெடுக்கும் போராட்டத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிவ சேனையினர் நிகழ்த்தி வருகிறோம். ஈழத் தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு போராட்டத்திலும் சிவ சேனையினர் வெற்றி அடைந்திருக்கின்றோம். எந்த ஒரு போராட்டத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பவில்லை.

பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்! மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை | North And East Hartal Maravanpulau Sachithanandan

எந்தவொரு போராட்டத்திலும் எவரும் கைதாகவில்லை. அவ்வாறே நாங்கள் போராட்ட உத்திகளை வகுத்தோம், வெற்றியடைந்து வருகின்றோம். தோல்வியடைந்த சமூகம் நாங்கள். அடிமைகளாக வாழும் சமூகம் நாங்கள்.

இழப்புகளைக் கடுமையாகச் சந்தித்த சமூகம் நாங்கள். குபேரர்களான அரசியல்வாதிகளே, கஞ்சி குடிக்கும் மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். அரசியல் அடிமைகளாக உள்ள அவர்கள், பொருளாதார அடிமைகளாகத் தொடர முடியாது. பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள்  என்றுள்ளது.

சூடுபிடிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல்: கொழும்பில் வீதிக்கு இறங்கிய மக்கள் (video)

சூடுபிடிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல்: கொழும்பில் வீதிக்கு இறங்கிய மக்கள் (video)

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் அவசர அறிவிப்பு : தாக்குதல் நடத்தப்படும் அபாயம்

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் அவசர அறிவிப்பு : தாக்குதல் நடத்தப்படும் அபாயம்

மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US