விடுதலைப் புலிகளின் குடாரப்பு தரையிறக்கமும், நோமண்டித் தரையிறக்கமும்!!
‘குடாரப்பு தரையிறக்கம்’ என்பது விடுதலைப் புலிகளின் ஆணையிறவு மீட்புச் சமரின்போது தளபதி பால்ராஜ் தலைமையிலான ஒருதொகுதி போராளிகள் கடல்வழியாக குடாரப்பு கடற்கரையில் தரையிறங்கி, ஆணையிறவை வெற்றிகொண்ட ஒரு பாரிய சமர்.
2000ம் ஆண்டு ஏப்ரலில் துணிகரமான ‘குடாரப்பு தரையிறக்கம்’ இடம்பெற்றபோது அதனை ஒரு ‘போரியல் அதிசம்’ என்று வர்ணித்த போரியல் ஆய்வாளர்கள், அதனை ‘நோமண்டித் தரையிறக்கத்துடன்’ ஒப்பிட்டு வியந்தார்கள்.
2ம் உலக யுத்தத்தின்போது நேசநாட்டுப் படைகள் பிரித்தானியாவில் இருந்து புறப்பட்டு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்சில் மேற்கொண்ட நோமண்டி தரையிறக்கத்துடன்தான் குடாரப்புத் தரையிறக்கம் ஒப்பிட்டு நோக்கப்பட்டது.
வீரமும் ஓர்மமும் விளையாடிய ‘நோர்மண்டித் தரையிறக்கம் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: