பூநகரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை
கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட அதிநவீன LED மின் விளக்குகளைப் பயன்படுத்திக் கணவாய் பிடிக்கும் முறையினால், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான உயிர்காப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வும், அவர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்றைய தினம் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் 2 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16 கடற்தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 584 கடற்றொழிலாளர்களுக்கு குறித்த உயிர்காப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் சமகாலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
குறிப்பாக, அத்துமீறிய இழுவைமடிப் படகுகளால் தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்படுவதோடு நீண்டகாலச் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மீன்வளம் குறைந்து செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இத்தகைய செயற்பாட்டால் கடல் வளம் சிதைக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்று வெறும் கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினர்.
மேலும், எல்லை தாண்டிய கடற்றொழிலாலும், கம்பம் கட்டும் முறையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதனாலும் தேவையற்ற இடர்பாடுகளையும் அச்சுறுத்தல்களையும் தாம் எதிர்கொள்வதாகத் தெரிவித்ததோடு, இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டனர்.
பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam