பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் பரிந்துரை
நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் பதிவொன்றையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தேர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளரான திருமதி ரோஹினி கவிரத்னவின் பெயர் எமது கட்சியால் முன்மொழியப்படும்.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 14, 2022
பிரதி சபாநாயகர் தேர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளரான ரோஹினி கவிரத்னவின் பெயர் எமது கட்சியால் முன்மொழியப்படும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri