இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்வது இன்றுடன் (11) நிறைவடைந்த நிலையில் தலைவர் பதவிக்காக சட்டத்தரணி கௌசல் நவரத்னவும் செயலாளர் பதவிக்காக இசுரு பாலபட்பந்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இன்று பிற்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்கள் ஏற்பு நிறைவடைந்ததோடு வேறு எந்த வேட்பாளரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாவிடின் இவர்கள் இருவரும் போட்டியின்றி பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படுவர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக சட்டத் துறையில் பிரபலமானவரான கௌஷல் நவரத்ன போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான கலாநிதி கே. கனகேஷ்வரன், கலாநிதி பாயிஸ் முஸ்தபா, கலாநிதி ரொமேஷ் த சில்வா, இக்ராம் மொஹமட், குஷான் த அல்விஸ், காலிங்க இந்ரதிஸ்ஸ, சஞ்சீவ ஜெயவர்தன, யூ. ஆர் டி சில்வா, நளிந்த இந்ரதிஸ்ஸ, சந்திக்க ஜெயசுந்தர, ஜகத் விக்ரமநாயக்க மற்றும் ஷிரந்தி குணவர்தன ஆகியோரினால் நிறைவேற்றப்பட்ட பரிந்துரைக்கு அமையவே அவர் போட்டியிடுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளிடம் பயிற்சி பெற்று அனுபவம் பெற்றுள்ள கௌஷல் நவரத்ன , சட்டத் துறையில் 26 ஆண்டுகளுக்கு மேல் தொழில் அனுபவம் பெற்றுள்ள சிரேஷ்ட சட்டத்தரணியாவார்.
சட்டத்தரணி கௌசல் நவரத்ன 2019 இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதோடு, சட்டத்தரணிகள் சங்கத்தின் பிராந்திய உப தலைவர் (கொழும்பு), செயற்குழு உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் (2014-2016) மற்றும் கொழும்பு சட்ட சங்கத்தின் தலைவர் (2016-2017) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 36 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
