நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, இன்று (07.10.2024) திங்கட்கிழமை பிற்பகல் வரை ஒரேயொரு சுயேட்சைக் குழுவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 08 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக மாவட்டத் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கால எல்லை
கடந்த 04ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கும் பணி ஆரம்பமாகியது. வார விடுமுறை முடிந்து மீண்டும் இன்று காலை 8.00 மணிக்கு மீண்டும் குறித்த பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை அலுவலக நாட்களில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri