தமிழரசுக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகும் மாவை..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என மாவை சேனாதிராஜா முடிவெடுத்திருந்த, நிலையிலேயே கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் கலை அமுதன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
கட்சித் தலைமை
முன்னதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கட்சித் தலைமைக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்திருந்தார்.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
