சிறுவர்களின் வங்கி கணக்குகளுக்கான வரி தொடர்பில் வெளியான அறிவிப்பு
சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளின் மாத வருமானம் 150,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அதற்கு வட்டிக்கு வரி வசூலிக்கப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று உறுதியளித்தார்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வட்டிக்கு 10 வீத வரி பிடித்தம் செய்வது குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வரி அறவீடு, 150,000 க்கு மேல் மாத வருமானம் உள்ள சிறுவர்களின் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அந்த வருமானத்தில் வட்டித் தொகை சேர்க்கப்பட்டால் மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கலந்துரையாடல்கள்
இந்த வரி உடனடியாக செயல்படுத்தப்படாது, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை எளிதாக்க வங்கி அமைப்புடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam