வடக்கில் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி இல்லை: யாழ் மக்களுக்கு மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை
விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏ.ஆர்.வி மற்றும் ஏ.ஆர்.எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஏ.ஆர்.வி மருந்துகள் வடக்கு மாகாண மருத்துவமனைகளில் குறிப்பிட்டளவு உள்ள போதும் ஏ.ஆர்.எஸ் தடுப்பூசி மருந்துகள் இல்லை என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“நாய்களைக் கண்டால் விலகிச் செல்லுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏ.ஆர்.பி மற்றும் ஏ.ஆர்.எஸ் தடுப்பூசி
மருந்துகள் வழங்கப்படாவிடின் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி உயிரிழப்பு
ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
