வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பல் இல்லை: ஆளுநர் வெளிப்படை
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மாத்திரமே, மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் சீரான பரம்பல் இல்லை என ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட காணி ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“காணி அணுகல்கள் ஏழை மக்களுக்கு மறுக்கப்படுவதோடு வசதிபடைத்தோர் வசமே அவை செல்கின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
சீரான பரம்பல் இன்மை
இடமாற்றங்கள் வழங்கப்படும்போது தான் பல அரச உத்தியோகத்தர்களுக்கு நோய் நிலைமை இருக்கின்றதே தெரியவருகின்றது.

அவர்கள் தான் தங்கள் பெற்றோர்களை கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவருகின்றது. இடமாற்றங்களை நிறுத்துவதற்காக இவ்வாறு அரச அதிகாரிகள் தெரிவிக்கக்கூடாது.

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பல் இன்மையால், யாழ். மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களில் பணியாற்றுவது கட்டாயம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam