மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு உத்தரவா? வெளியானது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன்படி, வெகு விரைவில் அஜித் நிவாட் கப்ரால் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிகப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த செய்திகளில் உண்மை இல்லை என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




