ஜேர்மனி இராணுவத்தில் இணைய தயங்கும் இளைஞர்கள்: வெளியான காரணம்
ஜேர்மனியின் ஆயுதப்படைகள் புதிய ஆட்களை சேர்ப்பதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விண்ணப்பதாரர்கள் ஏழு சதவீதம் குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளியேறும் பயிற்சியாளர்கள்
இராணுவத்தில் பயிற்சியின் போது சுமார் 30 சதவீதமானவர்கள் வெளியேறுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேர்மன் நாடாளுமன்ற ஆணையர், சில வீரர்களின் குடியிருப்புகளில் இணைய வசதி மற்றும் சுத்தமான கழிவறைகள் இல்லை என ஆராய்ந்துள்ளார்.
ஜேர்மனியின் இளைஞர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு இராணுவ ஆட்சேர்ப்பையும் பாதிப்பதாகவும் 2050இல் 15-24 வயதுடையவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் குறையும் என அவர் கூறியுள்ளார்.
ஆட்சேர்ப்புக்கு வரும்போது, இளைய தலைமுறையினர் கடந்த காலத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலையில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், இராணுவ வாழ்க்கைக்கு ஏற்ப மாறுவது கடினமாக இருப்பதாகவும் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
