நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நல்ல வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
டேன் பிரியசாத் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு அதிகரித்துச் செல்வதாகவும் குறைவடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இந்த அதிகரிப்பினை பார்த்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரனஜயபுர படைவீரர் கிராமத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும் என பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.