தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் என்று எதுவுமில்லை: அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் விளக்கம்
தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் என்று எதுவுமில்லை என அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அநேகமானவர்கள் நாட்டுக்குள் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துவதாகவும், தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் என்று உலகில் எங்குமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஓர் மாயை எனவும், சமூகத்தில் இவ்வாறான தவறான கருத்து விதைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் விமான உற்பத்தி துறை
சிவில் விமான உற்பத்தி துறைக்கு நிகரான தர நிர்ணயங்கள் மிக்க ஓர் துறையே மருந்துப் பொருள் உற்பத்தி துறை என அவர் கூறியுள்ளார்..
யாரேனும் விநியோகஸ்தர்கள் இலங்கையில் பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கென விசேட நடைமுறைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருள் விநியோகஸ்தர்களை பலவந்தமான அடிப்படையில் பதிவு செய்து கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 150 – 200 மருந்துப்பொருட்கள் இல்லை என்ற கூறுவதனால் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு என அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் அரச மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினால் திறந்த சந்தையின் ஊடாக அந்த மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என டொக்டர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
