எங்களுக்கு பாதுகாப்பு இல்லை:ஆளும் கட்சியினர் வெளிநாட்டுத் தூதரங்களுக்கு கடிதம்
ஜனாதிபதி தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் தமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கடிதங்கள் மூலம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் 50க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் முற்றாக தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
எனினும் பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினர் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவோ, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள், தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமான அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் வெட்கத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள், தமது கடிதங்களில் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri
