2026ல் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பிரதி அமைச்சர் அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டு சம்பள அதிகரிப்பு வழங்கப்படாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 2028ம் ஆண்டிலேயே பரிசீலனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கு போதியளவு தெளிவு கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாரும் தங்களது அடிப்படைச் சம்பளம் தொடர்பில் பேசுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக கூறினால் அது நியாயமானது என தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் கடந்த ஆட்சியாளர்கள் இதனைச் செய்யத் தவறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சியாளர்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு வழங்க முயற்சிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போராட்டங்களை நடத்த முடியும் எனினும் எதுவும் மாறப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெளிவாக கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் 2028ம் ஆண்டில் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்த முடியும் எனவும் அதுவரையில் எதுவும் மாறப் போவதில்லை எனவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.