மண்சரிவு அபாயம் குறித்து நுவரெலியா கட்டட ஆய்வு நிலைய அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ரொத்தஸ் கொலனியில் மண்சரிவு அபாயம் இல்லை என்று நுவரெலியா கட்டட ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ரொத்தஸ் கொலனியில் மண்சரிவு அபாயம் காரணமாக 25 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 பேர் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட புரூட்ஹில் தமிழ் வித்தியாலயத்திற்கு இடம்பெயருமாறு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய நேற்று மாலை 09 ஆம் திகதி இடம்பெயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் இல்லை
குறித்த பகுதியில் பல இடங்களிலும் வீடுகளிலும் ஏற்பட்ட வெடிப்புக்கள் மண் தாழிறக்கம் போன்ற காரணங்களால் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு ஆய்வுக்காக வருகை தந்த நுவரெலியா கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த பகுதியினை ஆய்வுக்குட்படுத்தி தற்போது உள்ள நிலையில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இனங்காணுப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அறிவுறுத்தல்கள்
இந்த பிரதேசத்தில் முறையான நீர் வழிந்தோடும் கட்டமைப்புக்கள் மற்றும் வீடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மதில்கள் இல்லாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் நீர் வடிகால்களையும் பாதுகாப்பு கட்டடங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் குடியிருப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,வீட்டில் வெடிப்புக்கள் மற்று வீடு தாழிறக்கம் ஆகியவற்றை பார்க்கும் போது பயமாக இருப்பதாகவும் ஆய்வு செய்து இங்கு மண்சரிவு ஏற்படாது என உறுதியாக தெரிவித்தால் நிம்மதியாக படுத்துறங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri