நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்த ஆண்டில் நீர் கட்டண உயர்வு எதும் மேற்கொள்ளப்படாது என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் இருமுறை நீர் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அதுகுறித்த அடுத்த கட்ட சீராய்வு 2027 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர் தொழில் துறை சார்ந்த சில உள்ளீட்டுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், நீர் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பது குறித்து எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கண்டி குண்டசாலே பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பலகொல்ல நீர் சுத்திகரிப்பு அலகின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
2 பில்லியன் ரூபா செலவில் விஸ்தரிக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, குண்டசாலே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு எதிர்காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 2000 பில்லியன் ரூபா தொகையானது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பாரிய நிதியாண்டாக அது அமையும் என்றும், நாட்டின் பல அபிவிருத்தித் திட்டங்களை இதன் மூலம் முன்னெடுத்து மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam