அரசியல்வாதிகளை விசாரிப்பதில் அரசியல் பழிவாங்கல் இல்லை: ஆனந்த விஜேபால
அரசியல்வாதிகளை விசாரிப்பதில் அரசியல் பழிவாங்கல் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சட்ட நடைமுறையாக்க அதிகாரிகள் தங்கள் விசாரணைகளின்படி தினமும் பல அரசியல்வாதிகளை அழைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படுவதில்லை மாறாக, விசாரணைகளை மேற்கொள்ள, பொலிஸ் திணைக்களத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) விசாரிக்கப்படுவதில் அரசியல் பழிவாங்கல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல்வாதிகள் விசாரிப்பதில் அரசியல் பழிவாங்கல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |