வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் விசேட சிவராத்திரி பூசை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் இன்றைய தினம் (26) இரவு சிவராத்திரி விசேட பூசை வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
இன்று இரவு-08 மணியளவில் முதல் சாமம் விசேட அபிஷேகம் பூசைகளுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நள்ளிரவு-12 மணிக்கு லிங்கோற்பவ காலச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூசை வழிபாடுகளும், பஞ்சமுக அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று (26) இடம்பெற்றுள்ளது.
காலை 4.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 6.30 மணியளவில் ஸ்தம்ப பூசையும், காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை.10 .30 மணியளவில் நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப் பெருமான் இரதத்திலே ஆரோகணித்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்தார்.
தேர்த் திருவிழாவிற்கு பெருந்தொகையான அடியார்கள் பங்குபற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சிவராத்திரி விசேட பூசை
அத்தோடு, நாளை (27) காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
15 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
