அரச வைத்தியசாலைகளுக்கு மின்சார சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (29.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சருக்கும் இலங்கை மின்சார சபை தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உறுதிமொழியை உறுதிப்படுத்தும் கடிதத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளது.
கட்டணங்களைத் தீர்ப்பதாக உறுதியளிப்பு
திறைசேரியால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு 120 மில்லியன் ரூபா கட்டணத்தை கடந்த நான்கைந்து மாதங்களாக சுகாதார அமைச்சினால் செலுத்த முடியவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலுவையிலுள்ள கட்டணங்களைத் தீர்ப்பதாக உறுதியளித்ததையடுத்து, அரச வைத்தியசாலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்கப்போவதில்லை இலங்கை மின்சார சபை என ஒப்புக்கொண்டது.
மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள மின்சார சபையின் கட்டணங்களைத் தீர்ப்பதற்கும், ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு நிதியை வழங்குவதற்கும் திறைசேரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
