இப்போது எந்தத் தேர்தலும் நடத்தும் சாத்தியப்பாடுகள் இல்லை - அரசாங்கம் திட்டவட்டம் (செய்திகளின் தொகுப்பு -Video)
தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணசபைத் தேர்தல்கள் குறித்த சட்டம் திருத்த நடவடிக்கைள் கடந்த அரசாங்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. எனவே அந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் தேர்தல்களை நடத்த முடியாது. அரசாங்கம் இது தொடர்பிலும் அவதானம் செலுத்தி இவ்வாண்டுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 18 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam