"சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை"
டொலர் பிரச்சினைக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் (International Monetary Fund) சென்றாவது கடனை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர்கள் சிலர், அமைச்சரவைக் கூட்டத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
டொலர் தட்டுப்பாடானது எரிபொருள் இறக்குமதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றால், நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிலைமை உருவாக்கும் என அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன உட்பட சிலர் தெரிவித்துள்ளனர்.
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri