மகிந்தவின் பரிதாப நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மதிப்பை பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அந்த மதிப்பை புரிந்துகொள்ள நீண்ட காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தனது தந்தையை நேசித்தவர்கள், விமர்சித்தவர்கள் மற்றும் நிராகரித்தவர்களும் உள்ளனர்.
நன்றியில்லாத உலகம்
இது நன்றியில்லாத உலகம். எனினும் நாங்கள் அவ்வாறான மனநிலையுடன் மக்களுக்காக பணியாற்றவில்லை.
இதயசுத்தியுடன் நேர்மையாக பணியாற்றினோம். அதன் காரணமாக மகிந்த இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையில் மகிந்த ராஜபக்ச கைச்சாத்திட்டிருந்தால், அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்.
எனினும் விடுதலைப் புலிகளை தோற்கடித்து நாட்டுக்கு நன்மை செய்தமையினால் மக்களால் வெறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாமல் கவலை வெளியிட்டுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்தமையினால் எமது அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தம் நாம் முன்னமே அறிந்திருந்தோம். ஆனாலும் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் எமது அரசியல் பயணம் தொடரும் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு விஜேராம இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நவீன கால துட்டகைமுனு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் தந்தையான மகிந்தவை சந்திக்க நாளாந்தம் வந்து செல்வதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் வெற்றியின் பின்னர் நவீன கால துட்டகைமுனு மன்னர் என சிங்களவர்களால் கொண்டாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
You May Like This
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri