ஒன்றாக பயணித்தால் எங்களை யாரும் பிடித்திழுக்க முடியாது! - ஜனாதிபதியிடம் கூறிய அமைச்சர் விமல்
இந்த அரசைப் பாதுகாக்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதியும் நீண்ட நேரம் பேசியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. “அரசாங்கத்தின் பாதை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக பேசியுள்ளார்.
அத்துடன், கோவிட் தொற்றுநோய் எதிர்பாராத விதமாக பரவியமை பற்றியும், அரசாங்கம் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் கூட்டாக செயற்பட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்,
“நாங்களும் தவறுகள் செய்திருக்கலாம். எனினும், அவற்றை சரிசெய்வோம். நாம் அனைவரும் இந்த பயணத்தில் கூட்டாகச் சென்றால், எங்களை யாரும் பிடித்து இழுக்க முடியாது.
இது நாம் அனைவரும் உருவாக்கிய அரசாங்கம்.
எனவே, இந்த அரசைப் பாதுகாக்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்.” என ஜனாதிபதியிடம் கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
