அம்பாறையில் பாற்சோறு வழங்கி சஜித்துக்கு ஆதரவு
அம்பாறை - புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் வெல்லும் சஜித் என்ற தொனிப்பொருளில் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து பாற்சோறு வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று(15) ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி
இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலப்பதி கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வீதியில் செல்வோர் உள்ளிட்டோருக்கு பாற்சோறு வழங்கி வைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளர்,
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலில் கைச்சாத்திட்டிருக்கின்றார்.

இதனை எமது மக்களுக்கு தெரியப்படுத்த நாடு பூராகவும் பட்டாசுகளை கொளுத்தி பாற்சோறுகளை வழங்கி வருகின்றோம்.
கடந்த 5 ஆண்டுகள் இலங்கை மக்களுக்கு கசப்பான வருடங்களாக கடந்து விட்டன.
இந்த இருண்ட தினத்தை வெளிச்சமாக்கி மக்களை சந்தோசப்படுத்துவதற்காக சஜித் பிரேமதாச வந்திருக்கின்றார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதியாக அவரை அனைவரும் ஆக்க முன்வாருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.





பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri