பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக செலவிடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு
காலி(Galle) மாவட்டத்தில் தரம் 7 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக காலி மாவட்ட சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளையும் மறந்து தொலைபேசியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனர்.

தங்களைச் சுற்றி நடக்கும் எந்த சிந்தனையும் அற்றவர்களாகக் காணப்படுவதுடன், கற்றலில் ஈடுபாடு காட்டுவதில்லை மாறாக தொலைபேசி விளையாட்டுக்கள், முகபுத்தகங்களின் பாவனை என்பவற்றில் நேரத்தை வீணாக செலவிடுகின்றனர்.
தொலைபேசி விளையாட்டு மீதான இவர்களின் ஈடுபாடு உணவு, உறக்கம் என்பவற்றை மறக்கடிக்கும் அளவில் காணப்படுகின்றது. சில நேரங்களில் பாடசாலைக்குக் கூட செல்லாமல் தொலைபேசி விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர் என குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam