டிட்வா புயல் சேத அதிகரிப்பிற்கு இதுவே காரணம்
நீர்பாசனத்துறை முகாமைத்துவம் மேற்கொள்வதில் அனுபவமின்மையே டிட்வா புயல் தாக்க சேதங்கள் அதிகரித்தமைக்கான காரணமாகும் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மகாவெலி ஆணையம் மற்றும் நீர்ப்பாசனத் துறை போன்ற அரச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள இடைநிலை முகாமைத்துவ மட்ட அதிகாரிகள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவே அண்மைய சுழற்காற்றால் ஏற்பட்ட கடும் சேதத்திற்கு பிரதான காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீர்த்தேக்க முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள் பற்றாக்குறை தற்போது மிகக் கடுமையான நெருக்கடியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“நீர்த்தேக்க முகாமைத்துவம் குறித்து ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்ட இடைநிலை மட்ட முகாமை அதிகாரிகள் இன்று நீர்ப்பாசனத் துறையிலும் மகாவெலி ஆணையத்திலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த திறன் பற்றாக்குறை தனியார் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.
‘டிட்வா’ சுழற்காற்றின்போது ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு, நீர்த்தேக்கங்களை முறையாக முகாமைத்துவம் செய்யத் திறமைசாலியான அதிகாரிகள் இல்லாமையே நேரடியாக காரணமாக அமைந்நது என தெரிவித்துள்ளார்.
இதற்கான அடிப்படை காரணம், நாட்டில் இருந்த திறமையான முகாமையாளர்கள் பெருமளவில் வெளிநாடு சென்றமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை கடந்த காலத்தில் எடுத்த தவறான பொருளாதாரத் தீர்மானங்களையும் பாட்டளி சம்பிக்க ரணவக்க விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, பிரபல இந்திய பொருளாதார நிபுணர் பி.ஆர். ஷெனோய் முன்வைத்த சீர்திருத்த அறிக்கையை நடைமுறைப்படுத்தாததே இலங்கை செய்த “மிகப் பெரிய தவறு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நேரத்தில் அந்த அறிக்கை அப்போதைய அமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், டட்லி சேனநாயக்க அரசு அதை செயல்படுத்தத் தயங்கியதால், நாட்டுக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு இழந்துவிட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.