பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்குவதாக நாம் கூறவில்லை
பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு வழங்குவதாக தாம் கூறவில்லை என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில்கள் வழங்குவதாக உறுதிமொழி வழங்கியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 23000 பேருக்கு மட்டுமே அரசாங்க தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க முயற்சியான்மைகளுக்காக இந்த ஆண்டில் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனியார்துறை தொழிற்சந்தைக்கு பொருந்தக்கூடிய வகையில் நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொழில் வாய்ப்புக்களை தொடர்ந்தும் வழங்கப்பட முடியாது எனவும் கடந்த அரசாங்கம், தொழில்வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கியதனால் வெற்றிடங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam