சந்திரிக்காவின் கருத்துக்கள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை! மொட்டு தரப்பில் தெரிவிப்பு
ராஜபக்சக்களை பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Bandaranaike) வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சந்திரசேன (Chandrasena) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறியதாவது, "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்களால் எமது கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
மாறுபட்ட கருத்து
அக்கட்சியினர் தான் எம்மை நம்பி உள்ளனர். நாம் அவர்களை நம்பி இல்லை. சந்திரிக்கா ஒவ்வொறு காலத்திலும் ஒவ்வொரு அறிவிப்பினை விடுத்து வருகின்றார்.
மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய வைத்து
பொது வேட்பாளராக அவரே களமிறக்கினார்.
ஆனால், இன்று மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றார். ஆகவே, ராஜபக்சக்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்துக்கள் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
