ரொஹான் பிரேமரத்னவைக் கைது செய்வதற்கு அவசியமில்லை..! நீதிமன்றத்தில் அறிவிப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தடுக்கக் முன்பிணை ஒன்றை விடுவிக்கக் கோரி ரோஹான் பிரேமரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னிலையான அதிகாரி
இதன்போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
