அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லை! முக்கிய சேவைகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்
நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் 4G அலைவரிசை சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய சேவைகள்..
இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், காணி உரிமப் பத்திரப் பரிவர்த்தனைகள் மற்றும் வாகன வருமான உரிமங்களைப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய அரச சேவைகள் அனைத்தும் இணையவழியில் (Online) மாற்றப்படவுள்ளன.

மேலும், நாடு முழுவதும் 4G வலையமைப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 புதிய 4G கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதில் 250 கோபுரங்களின் பணிகள் அடுத்த ஆண்டிலேயே நிறைவுசெய்யப்படவுள்ளன.
நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்து மின்மயமாக்கல் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு அங்கமாகவே இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..