இனி அனுதாபம் கிடையாது! பிரித்தானியா பிரதமரின் திட்டவட்ட அறிவிப்பு
யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் மூன்று கருப்பின வீரர்கள் சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் இருக்கும் விம்ப்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதிய நிலையில், பெனால்ட்டி சூட்டில் இங்கிலாந்து, இத்தாலியிடம் தோல்வியடைந்தது.
இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் பலர், அணியில் இருக்கும் மூன்று கருப்பின வீரர்களை(Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Sako) கடுமையாக விமர்சித்திருந்தனர்.
ஏனெனில் அவர்கள் தான் பெனால்ட்டி சூட் வாய்ப்பை தவறிவிட்டனர். எனவே அவர்கள் தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி, இனவெறியை தூண்டும் வகையில் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
We are working closely with the football authorities and the police to ensure we can track and take action against online abusers and will ban them from football grounds in the same way we would if they had committed these offences on our streets. pic.twitter.com/8jyy60zgRu
— Boris Johnson (@BorisJohnson) July 14, 2021
இதையடுத்து, சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் போரிஸ், இது போன்று சமூக ஊடகங்களில் இனரீதியாக விமர்சிப்பவர்களை, இனி கால்பந்து போட்டிகளை நேரில் சென்று பார்க்காத வகையில் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அவர், இது ஒரு மிகவும் கண்டிக்கத்தக்க செயல், இந்த செயலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கால்பந்து தடை விதிமுறை மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கான நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே, இனி கால்பந்து போட்டி தொடர்பாக சமூக ஊடகங்களில் இனரீதியாக தாக்கப்பட்டால், அவர்கள் போட்டியை நேரடியாக பார்க்க முடியாது என்று ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விஷயத்தில், எந்த ஒரு அனுதாபமும் கிடையாது, ஒரு போட்டியைத் தொடர்ந்து அந்த குற்றவாளி தொடர்ந்து இது போன்ற குற்ற செயலலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் மூலம் தடை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த போரிஸ் அரசு கால்பந்து அதிகாரிகள் மற்றும் பொலிசாருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.