அமைச்சில் தேனீரை வழங்கவும் பணமில்லை-டயான கமகே
சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீரை வழங்கவும் பணம் இல்லை என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலையை கொள்வனவு செய்யவும் எனக்கு வழியில்லை. அமைச்சின் செலவுகளுக்கு பணமில்லை.
இப்படியான நிலைமை நிலவும் நாட்டில் எப்படி 10 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவது. 10 பில்லியன் ரூபா செலவில் இது முடிந்து விடாது.
வாக்குச்சீட்டுக்களுக்கான காகிதங்களையும் மை போன்றவற்றையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அவை இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை.
நாட்டில் எங்கே பணம் இருக்கின்றது. இதனால், கேலியை நிறுத்துங்கள். நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தல் அவசியமில்லை.
நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம். அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வோம். இதன் பின்னர் அடுத்தடுத்து தேர்தல்களை நடத்துவோம் எனவும் டயனா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
