வெளிநாட்டு பயணச் செலவு குறித்து போலி பிரசாரம்! அனுர குற்றச்சாட்டு
வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் தொடர்பில் போலி பிரசாரம் செய்யப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அனுர கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரசாரம்
அண்மைய நாட்களில் தாம் மேற்கோண்ட வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும் 3.37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்திய விஜயங்களுக்காக அந்தந்த நாடுகள் அனுசரணை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
அனுசரணை
தென்கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீஸ்டன், பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களுக்காகவே தாம் செலவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பயணங்களுக்கான செலவுகளை அந்தந்த நாடுகளின் தேசிய மக்கள் சக்தி கிளைகளினால் மேற்கொள்ளப்பட்டது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.