அமைச்சர் என்ன சொன்னாலும் நிச்சயம் எரிபொருள் விலை உயரும்: ரில்வின் சில்வா
எரிசக்தி துறைசார் அமைச்சர் என்ன சொன்னாலும் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்வடையும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எரிசக்தி மற்றும் மின்சக்தி என்பன ஒன்றுடன் ஒன்று இணைந்த துறைகள் என்பதனால் எரிபொருட்களின் விலைகளும், மின்சாரக் கட்டணங்களும் நிச்சயம் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருட்களைக் கொள்வனவு செய்யும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் 500 மில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விரயங்களைத் தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு எரிபொருள் கப்பல் ஒன்று கொண்டு வரப்படுவது அமைச்சர்களுக்கு மெஜிக்காக மாறியுள்ளது என ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
