தமிழருக்கு எதிரான தேரரின் கருத்து! நாடாளுமன்ற உறுப்பினரின் கவலை
மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரரின் கருத்தை முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் வெட்கக்கேடாக நோக்குகிறது. இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.
மக்களின் பிரச்சினை
மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர் அவர்கள் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார். இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வேதனையில் ஆழ்ந்துள்ளது.''என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
