ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் முயற்சி - நிபந்தனையுடன் முடிவுற்ற வழக்கு

Northern Province of Sri Lanka Sri Lankan Schools schools
By Theepan Aug 04, 2026 10:36 AM GMT
Report

ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் துணைச் செயலாளராகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வெற்றி பெற்றுள்ளது.

அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும்.

எனினும் யுத்த காலங்களில் மத்திய கல்வி அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக இலங்கை முழுவதிலும் ஏறத்தாழ 350 வரையிலான பாடசாலைகளையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் 20 பாடசாலைகளையும் அமைச்சரவைப் பத்திரம் மற்றும் நிர்வாக வழிமுறைகள் மூலம் தேசிய பாடசாலை என்ற பெயரில் தனது ஆளுமையின்கீழ் கொண்டு வந்திருந்தது.

மைத்திரிபால சிறிசேனவின் தலமையிலான ஆட்சியின்கீழ் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு நடைபெற்ற ஐம்பது நாள் ஆட்சியில் டலஸ் அழகப்பெருமா கல்வி, அமைச்சராக இருந்தார்.

தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்

தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்

தேசிய பாடசாலை

அவர் ஏற்கனவே தேசியப் பாடசாலை என்ற பெயரில் செயற்பட்டு வந்த 350 வரையிலான பாடசாலைகளுக்கு மேலதிகமான 650 வரையிலான பாடசாலைகளை உள்ளீர்த்து நாடு தழுவிய வகையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மாகாணங்களிடமிருந்து கபளீகரம் செய்து மத்திய கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் செயற்படுத்தும் நோக்குடன் ஆயிரம் தேசிய பாடசாலைத் திட்டத்தை அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து கல்வி அமைச்சர்களாகச் செயற்பட்ட ஜி.எல்.பீரிஸ் மற்றும் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டனர்.

இந்தத் திட்டம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறும் செயல். எனவே இத்திட்டமானது அரசியல் யாப்புக்கு முரணானதும் சட்டவிரோதமானதுமாகும்.

எனவே இத்திட்டம் செயற்படுத்தப்படாமல் தடை செய்யவேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் கல்வி அமைச்சரான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 2022ஆம் ஆண்டு வைகாசி (மே) மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடையுத்தரவு வழங்க மறுத்தது. ஆனால் வழக்கை ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கில் மத்திய கல்வி அமைச்சர் அவரது செயலாளர் உட்பட பதினாறு பேர் பிரதிவாதிகளாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி தனது தரப்பு வாதம் 6168 எதனையும் முன்வைக்கவில்லை.

ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் முயற்சி - நிபந்தனையுடன் முடிவுற்ற வழக்கு | No Law To Incorporate Schools National Schools

மாறாக இத்திட்டத்தினைச் செயற்படுத்துவார்களா இல்லையா என்பது பற்றி அமைச்சரிடம் பேசிப் பதில் சொல்ல கால அவகாசம் வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு அமர்விலும் கால இழுத்தடிப்பையே செய்து வந்தார்.

இந்நிலையில் 18.08.2023 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனைத்து மாகாண ஆளுநர்களின் செயலாளர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் பட்டியலிலுள்ள பாடசாலைகளில் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட (கபளீகரம் செய்யப்பட்ட) பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளின் தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகைகளை அகற்றும்படியும் அப்பாடசாலைகளின் அதிபர்கள் தேசிய பாடசாலை என்ற பதவி முத்திரையோ கடிதத் தலைப்போ பயன்படுத்தக் கூடாது என்றும் இதனை நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தி இருந்தது.

மேலும் சுற்றறிக்கையில் இப்பாடசாலைகள் தொடர்ந்தும் மாகாணக் கல்வி நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் கணிசமான பாடசாலைகள் இவற்றைச் செயற்படுத்தத் தவறியமையால் அவற்றை விரைந்து செயற்படுத்துமாறு 20.02.2024 திகதியிட்ட நினைவூட்டல் கடிதம் மத்திய கல்வி அமைச்சினால் அனைத்து மாகாண கல்வி நிர்வாக தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.

வழக்குத் தாக்கல்

மத்திய மாகாண பாடசாலைகள் மீண்டும் திறப்பு! வெளியான அறிவிப்பு

மத்திய மாகாண பாடசாலைகள் மீண்டும் திறப்பு! வெளியான அறிவிப்பு

இச்சுற்றறிக்கை மூலம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதற்கு முன்னர் தேசிய பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் தொடர்ந்தும் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பது நிர்வாக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்படாமல் கால இழுத்தடிப்பே தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏறத்தாழ 3 வருடங்கள் களித்து 23.05.2025இல் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் “குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை..." என சட்டமா அதிபர் அறிவுறுத்தி உள்ளார் என ஒப்புதலளித்தார்.

ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டம் அரசியல் யாப்பிற்கு விரோதமானதும், FLL விரோதமானதுமாகும் என்பதே வழக்கின் அடிப்படையாகும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை என்பதைச் சட்டமா அதிபர் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இவ்வழக்கை கைவாங்குமாறு (வாபஸ் பெறுமாறு) இரண்டு நீதிபதிகள் கொண்ட இம்மன்று வழக்காளியின் சட்டத்தரணியிடம் கோரியது.

எனினும் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்துக்கு முரணாக நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் "இவ்வாயிரம் பாடசாலைகளை மீண்டும் மாகாண சபைகளிடம் கையளிக்கும் உத்தேசம் இல்லை” என கருத்து வெளியிட்டமை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. சில மாதங்கள் களித்து மத்திய கல்வி அமைச்சு ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர எவற்றையும் சுவீகரிக்கும் உத்தேசம் இல்லை என்ற எழுத்து மூல அறிவித்தலை சட்டமா அதிபரூடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தது.

எனவே,

1. பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு தனது நிர்வாகத்தின் கீழ் எடுப்பதற்கு சட்டம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலும்,

2. வழக்குத் தாக்கல் செய்ய முன்னர் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனையவை சுவீகரிக்கப்படும் உத்தேசம் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்களித்த உறுதிப்பாட்டையும் கருத்திற் கொண்டு.

3. பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு எடுத்துக் கொள்வதற்குச் சட்டம் இல்லை என்றால் வழக்குத் தொடுப்பதற்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளும் சட்டவிரோதமானவேயே.

எனவே அவை மீண்டும் மாகாண நிர்வாகத்திற்குரியதாக விடுவிக்கப்பட வேண்டும் என புதிய வழக்கைத் தொடுப்பதன் மூலமே சாத்தியம் என்பதாலும் அல்லது அரசியல் ரீதியில் மீளப்பெறப்படலாம் என்ற இரு வழிகளே உள்ள யதார்த்தத்தின் அடிப்படையிலும் அவசியமேற்படின் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் புதிதாக வழக்குத் தொடரப்படும் என்ற நிபந்தனையுடன் வழக்கு முடிவுற்றது.

ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் முயற்சி - நிபந்தனையுடன் முடிவுற்ற வழக்கு | No Law To Incorporate Schools National Schools

போராட்டத்தின் முதல்படி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் மத்திய அரசால் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் போராட்டத்தின் முதற்படியான இச்சட்டப் போராட்டத்தின் முடிவுகளின் முக்கியத்துவம் :

1. பாடசாலைகளை மத்திய அரசு உள்ளீர்ப்பதற்கு சட்டம் இல்லை. எனவே தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு பாடசாலைகளை எடுத்தமை மற்றும் எடுக்க முயற்சிப்பது சட்டவிரோதமானது என்பது நிரூபிக்கப்பட்டது.

2. மத்திய கல்வி அமைச்சு நாடு தழுவிய வகையில் கையகப்படுத்த முனைந்த ஏறத்தாழ அறுநூற்றி ஐம்பது வரையான பாடசாலைகளும் குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து எடுக்க முனைந்த நாற்பத்தியெட்டு பாடசாலைகளும் மத்திய அரசால் பறிக்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

3. வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்டு இன்று தேசிய பாடசாலை 61601 மத்திய நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பாடசாலைகளும் சட்டவிரோதமாகவே கையகப்படுத்தப்பட்டவை. சட்டப்படி அவையும் மாகாண நிர்வாகத்திடம் கையாளிக்கப்பட வேண்டியவை என்பதற்கான சட்டரீதியான சான்று நிறுவப்பட்டுள்ளது.

4. இது வரை காலம் மாகாணத்திற்கு உரித்தான ஆனால் மத்திய அமைச்சர்களால் கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை.

அதிக அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் - உடன் வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

அதிக அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் - உடன் வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

அரசியல் யாப்பிற்கு விரோதமானவை அவை சம்பந்தப் அமைச்சர்களால் மாகாண நிர்காகத்திற்கு மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்பதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.

இவ்வழக்கைத் தாக்கல் செய்வதில் உதவிய அனைவருக்கும் குறிப்பாக இவ்வழக்கில் முன்னிலையாகி வாதாடியா சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன் அவரது கனிஸ்ட சட்டத்தரணி லக்ஸ்மணன் மற்றும் வழக்கைப் பதிவு செய்தலுட்பட்ட நிர்வாக ரீதியாக விடயங்களை கையாண்ட சட்டத்தரணி ரட்ணவேல் மற்றும் அவரது சட்டக்கு ழுவினர்க்கும் இந்த இடத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

You may like this..


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US