நீதியை நிலைநாட்டும் நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு இல்லவே இல்லை - ஜோன் பிஷர்
நீதியை பின் தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் உரையாற்றியிருந்தார்.
இதில் சர்வதேசக் குற்றங்களை மறுப்பதாகவும், பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும், கூறியதாக ஜோன் பிஷர் கோடிட்டு காட்டியுள்ளார்.
இதைக்கேட்ட பின்னர், நீதியை பின் தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.