அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை! - மனம் திறந்த ரோஹித ராஜபக்ச
அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இளைய மகன் ரோஹித ராஜபக்ச(Rohitha Rajapaksa ) தெரிவித்துள்ளார்.
எனினும் குருநாகல் மாவட்டத்தில் தனது தந்தை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள, ரோஹித, அரசியலில் சேரும் எண்ணம் இல்லை, ஆனால் மக்களின் நலனுக்காக சமூகத் திட்டங்களில் பெரிதும் ஆர்வம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் தமது தந்தை அதிக வாக்குகளைப் பெற்று பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார். இப்போது அவர் பிரதமராக இருப்பதால், அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரோஹித தெரிவித்துள்ளார்.