சஹ்ரானுக்கு பதிலாக புதிய தலைவர் குறித்து வெளியான தகவல் பற்றி தெரியாது - அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமிற்கு பதிலாக புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் தகவல் கிடைக்கப்பெற்று இருந்தால் அது குறித்து பொலிஸாரும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடக சந்திப்பில் தெரிவித்தார் என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் நளிந்தவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு இருப்பதனால் அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கி விடுவார்கள் எனவும் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு தகவல்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான ஓர் விடயம் குறித்து நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஒரு பிரஜை என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவகக் ஊடக சந்திப்பு நடத்தாமல் உரிய தரப்பினருக்கே அறிவித்திருக்க வேண்டும் என நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri