மேற்கு முனையத்தை பெற்றுக்கொள்வதில் நாட்டமில்லை - இந்தியா
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பெற்றுக்கொள்வதில் நாட்டமில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை பெற்றுக்கொள்வதில் தமக்கு நாட்டமில்லை என இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே இதனைக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு முனையத்தை வழங்குவதாக இணங்கியிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டங்களினால் அது வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது போன்று மேற்கு முனையத்திற்கு எதிர்ப்பு கிளம்பினால் வழங்கப்படாதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவட்சா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு முனையம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்கும் என இந்தியா கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
