நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு பாதிப்பு கிடையாது – ரதன தேரர்
தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அதுரலிய ரதன தேரர் (Athuraliya Ratana Thera) தெரிவித்துள்ளார்.
அபே ஜன பல கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ரதன தேரரை நீக்கியதாக அந்த கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் கட்சியினால் எடுக்கப்பட்ட எந்தவொரு தீர்மானமும் தம்மை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்காக அபே ஜன பல கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாகவும், தாம் அந்தக் கட்சியின் உறுப்பினர் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் கட்சியினால் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரதன தேரரை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குமாறும் அபே ஜன பல கட்சி அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam