ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை! அடுத்தக் கட்ட நகர்வுக்குத் தயாராகும் மகிந்த தரப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆட்சி செய்ய முடியாது என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் எமது கட்சியே பெரிய கட்சியாக காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

எதிர்காலத்தில் நாட்டில் சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமையுமானால் அதில், எமது கட்சி நிச்சயமாக பங்காளியாக செயற்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தான் இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது. எமது கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆட்சி செய்ய முடியாது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் எவ்வாறான அரசாங்கம் அமையப்போகிறது என்பதை பார்த்து, நாம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதற்கு வரவேற்பு தெரிவிப்போம்.
எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர கோட்டாபய ராஜபக்சவிற்கு முழு உரிமை உண்டு. அவர் இலங்கை பிரஜை.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் செயற்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri