தற்போதைய நாடாளுமன்றம் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டது: அநுரகுமார - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டின் அடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமராக எதிர்கால அரசியல் ஆசையில்லாத ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்புக்கு பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை. கடற்றொழிலாளர்களுக்கு படகை எடுத்து கடலுக்குச் செல்ல முடியாத நிலை. குழந்தைகளுக்கு பால் மா இல்லை.
இவ்வாறான நிலையில், உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என்றும் நாம் தெரிவித்திருந்தோம்.
ஏனெனில், தற்போதுள்ள இந்த நாடாளுமன்றமானது மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். இவர்களால் நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய எந்தவொரு தகுதியும் கிடையாது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam