முத்தையன் கட்டு குளத்தின் நீர் திறந்துவிடப்பட்ட போதும் உழுவதற்கு எரிபொருள் இல்லை: விவசாயிகள் கவலை(Photos)
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்ட போதும் விதைப்பினை மேற்கொள்ள நிலத்தினை பண்படுத்துவதற்கு உழவு இயந்திரத்திற்கான எரிபொருள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
ஒட்டுசுட்டானில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லாத நிலையில் உழவு இயந்திரங்களுடன் நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் மழையினையும் பொருட்படுத்தாது விவசாயிகள் எரிபொருளினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. முத்துஜயன் கட்டு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை தொடங்கப்பட்டு குளத்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், உழவு இயந்திரங்களுக்கு டீசல் இல்லாத நிலையில் விவசாயசெய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நீண்ட வரிசையில் உழவு இயந்திரத்தினை நிறுத்தி வைத்துவிட்டு மழையிலும் காத்திருக்கின்றார்கள் இவர்கள் டீசலினை பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருக்கின்றார்கள். குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் இல்லாததால் உழச்செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேட்டுநில பயிர்செய்கையாளர்கள் மற்றும் உப உணவு பயிர்செய்கையாளர்கள்
நெற்செய்கையாளர்கள் என அதிகளவான விவசாயிகள் டீசல் இல்லாத நிலையில் நிலத்தினை
பண்படுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
