எரிபொருள் நிரப்ப இலங்கை வரும் சீன கப்பல்: வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் கண்டனம்
இலங்கை தனது சொந்த மக்களுக்கே எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலையில் சீனாவின் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக ஹம்பாந்தோட்டைக்கு வருவதாக கூறப்படும் முரண்பாடான தகவலை அமரபுர மகா சங்க சபையின் தலைவரான வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலை நங்கூரமிட அனுமதிக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதி
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிப்பது இலங்கையின் தேசிய மற்றும் மூலோபாய நலன்களுக்கு பாதகமானது.
இந்த நேரத்தில் கப்பலின் வருகை அவசியமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது இலங்கையை பொறுத்தவரை, எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியாவையும், சர்வதேச நாணய நிதியத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்நிலையில் சீனாவின் உளவுக் கப்பல் வருவது என்பது அவசியமற்றது. அத்துடன்
பிரச்சினைகளை தீவிரமாக்கும் செயற்பாடு” என தெரிவித்துள்ளார்.