நேற்று முதல் நடைமுறையாகியுள்ள திட்டம்! மோசமான செயல் என்று மக்கள் காட்டம்..
வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக பொலித்தீ பைகள் வழங்கப்படாது என நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீன் பைகளின் விலையும் நேற்று முதல்(1) விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளையதினம் முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பொலித்தீன் பைகளை இல்லாதொழிப்பது நல்ல விடயம் ஆனால் இந்த திட்டத்தில் சந்தேகம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே உக்கும் வகையில் பைகள் என்னும் திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கமைய மாற்று திட்டமொன்றை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
லங்காசிறியின் மக்கள்குரல் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த போது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.